கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆல் இந்தியா ஐடி அசோசியேசன் அலுவலகம் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தேசிய அள்வில் கணிணி மற்றும் பொது அறிவு போட்டிகள் 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கணிணி மற்றும் பொது அறிவு போட்டியில் கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாண்டிச்சோரி பள்ளியில் ( CITY CAMPUS ) III LEVEL படித்து வரும் B.அனுஷயா முதல் இடத்தையும் B.அக்சயா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் வெற்றி பெற்ற இரு குழந்தைகளும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இரட்டையர்கள் இருவரையும் பள்ளியின் செயலர் திரு.K.P.கெட்டிமுத்து அவர்கள் பாராட்டி பரிசளித்தார். இந்நிகழ்வில் இயக்குநர்கள், பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி, முதல்வர்கள், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர் பாலசுந்தர், மைலாவதி மற்றும் உடன் பயிலும் மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.